ஆனைமலை அருகே திருநங்கையுடன் கணவருக்கு பழக்கத்தால் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
ஆனைமலை அருகே திருநங்கையுடன் கணவருக்கு பழக்கத்தால் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போதுவை என்ற இடத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண்.

இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் இளம்பெண்ணின் கணவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருநங்கை ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிற்கு வராமல் திருநங்கையுடன் வசித்து வந்தார். இது குறித்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் நாகராஜை அழைத்து அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரும் இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 3 மாத பெண் குழந்தையுடன் மாயமானார்.

அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் 3 மாத கைக்குழந்தையுடன் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com