தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.
கருத்தரங்கம் நடந்த காட்சி.
கருத்தரங்கம் நடந்த காட்சி.
Published on

வள்ளியூர்-

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக "தொழில் முனைவோரின் எதிர் கால திட்டம்-2047" என்ற தலைப்பில் தேசிய அளவி லான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் வி.பி.ராம நாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தி னராக வணிகவியல் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்ம ரஜினி சிறப்புரை யாற்றினார். 2-ம் அமர்வில் கேரளா, கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம் தொடர்பான கருத்து க்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் கலந்து ரையாடல் நடை பெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேரா சிரியர்கள் செய்திருந்தா ர்கள். கருத்தரங்கில் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஒருங் கிணைப் பாளர் வேல் பாண்டி நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com