ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் தெப்பத்திருவிழா

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார்.
நம்மாழ்வார் தெப்பத்திருவிழா நடந்த காட்சி. (உள்படம்: அலங்காரத்தில் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் தெப்பத்திருவிழா நடந்த காட்சி. (உள்படம்: அலங்காரத்தில் நம்மாழ்வார்.
Published on

தென்திருப்பேரை:

நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.

நேற்று முன்தினம் 10-ந்தேதி இரவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

நேற்று இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரி யார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தார். இன்று மதியம் தீர்த்தவாரி நடைபெருகிறது.

விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரிதிரும்புகிறார்.

விழாவில் எம்பெரு மானார் ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித், காரியமாறன் கலை காப்பகத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com