இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் தற்கொலை

இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com