கோவில் விழாவில் நையாண்டி மேளத்திற்கு நடனமாடிய பெண்கள்

வெண்ணந்தூர் அருகே கோவில் விழாவில் நையாண்டி மேளத்திற்கு நடனமாடிய பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
.
.
Published on

ராசிபுரம்: 

ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகே உள்ள பழந்தின்னிபட்டி அருந்ததியர் காலனியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

நையாண்டி மேளம் இதையொட்டி சாமி ஊர்வலம் தினந்தோறும் நடந்து வந்தது. விழாவை யொட்டி அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் ஊர்வலம், சத்தாபரணம், வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சி கள் நடந்தன. சாமி ஊர்வ லத்தை ஒட்டி நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு பெண்கள் நடனம் ஆடினர். 

யகாவில் திருவிழாவில் பொதுவாக மேளதாளத் திற்கு ஏற்றவாறு ஆண்கள் நடனம் ஆடுவது வழக்கம். ஆனால் இங்கு ஆண்களுக்கு இணையாக நையாண்டி மேளத்திற்கு ஏற்றவாறு நளினமாக பெண்கள் நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com