

பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம், குடி தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (65), கூலித் தொழிலாளி. இவர் நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தொடர்ந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த வீரப்பன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துமனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரப்பன் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள குட்லாம்பாறை பகுதி வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி நிர்மலா (43). இவர் கடந்த ஒரு வருடமாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த நிர்மலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு சிகிச்சை பல னின்றி நிர்மலா உயிழந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.