நாமக்கல் அருகே ரூ.50 லட்சம் கஞ்சாவுடன் 2 பேர் கைது

நாமக்கல் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் முதலைப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 240 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான அந்த கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் உத்தமபுரம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 40), இளவரசன் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள்? எங்கு கொண்டு செல்கிறார்கள் எனவும், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com