

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள உழவர்பட்டியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது51), இவரது மகன்கள் ஜீவா (22), தினேஷ் (20) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த மணி (28). இவர்கள் நான்கு பேர்களும் நன்செய் இடையாற்றில் இருந்து உழவர்பட்டிக்கு செல்ல பரமத்திவேலூர் அருகே உள்ள பொய்யேரிக்கு வந்துள்ளனர்.
அப்போது பொய்யேரியில் நின்று கொண்டிருந்த நன்செய் இடையாற்றைச் சேர்ந்த பூபாலன் (28), சேது (23) மற்றும் சஞ்சய் (19) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரைவொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த நன்செய் இடையாற்றை சேர்ந்த பூபாலன், சேது ஆகியோர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையிலும், சஞ்சய் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உழவர்பட்டியைச் சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த முருகேசன், மணி ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமறைவான உழவர்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை வேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.