குடியிருப்புகளுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சிக்கியது

பரமத்திவேலூர் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புவீரர்கள் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே பெரிய சூரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்திரா (வயது 40).

இவரது வீட்டின் அருகே 5அடி நீளமுள்ள இரண்டு கட்டு விரியன் பாம்புகள் பதுங்கி இருந்தது.

அதைப்பார்த்ததும் அக்கம்பக்கத்தினரை அழைத்து பாம்புகளை விரட்டினார். ஆனால் 2 கட்டுவிரியன்பாம்புகளும் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை.

இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு இருந்த 5 அடி நீளமுள்ள இரண்டு கட்டு விரியன் பாம்புகளை பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com