கொளக்காட்டுப்புதூரில் கரும்புத் தோட்டத்தில் திடீர் தீ

பரமத்திவேலூர் அருகே கொளக்காட்டுப்புதூரில் உள்ள கரும்புத் தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (63), விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டு உள்ளார்.

இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தினர் அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்கள். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. 

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் ரூ50 ஆயிரம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாகின.

X

Maalai Malar
www.maalaimalar.com