ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

குமாரபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பொக்லைன் மூலம் காம்பவுண்டு சுவரை அகற்றும் பணி நடந்த காட்சி.
பொக்லைன் மூலம் காம்பவுண்டு சுவரை அகற்றும் பணி நடந்த காட்சி.
Published on

குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் அங்குள்ள ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து காம்ப-வுண்ட் சுவர் அமைத்திருந்-தனர். 

இது பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் நேற்று குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று பொக்லைன் மூலம் காம்பவுண்ட் சுவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  

இதனை அறிந்த மில் நிர்வாகத்தினர் அவர்களாக முன் வந்து அந்த சுவற்றை அவர்கள் அகற்றினர். இதில் உதவி தாசில்தார் ரவி, வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com