நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாசிமாத சிறப்பு பூஜை நடந்தது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக குறைவான பக்தர்களே சாமி தரிசனம் செய்து வந்தனர். 

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தினசரி தாக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வந்து இருப்பதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் நேற்று மாசி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது.

பின்னர் பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com