குமாரபாளையத்தில் ஷேர் ஆட்டோ மோதி சிறுவன் படுகாயம்

குமாரபாளையத்தில் ஷேர் ஆட்டோ மோதி சிறுவன் படுகாயம்-டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

குமாரபாளையம்: 

குமாரபாளையம் அருகே சடையம்பாளையத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார், (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவரது மகன் விபிஷ் (6), பகலில் வினோபாஜி நகர் சாலையின் குறுக்கே சிறுவன் விபிஷ் நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். 

உடனே அக்கம் பக்கத்தினர்  ஓடி வந்து விபிஷை மீட்டு  சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இது குறித்து சிறுவனின் தந்தை குமாரபாளையம் போலீசில் புகார் செய்ததில், ஆட்டோ டிரைவர் அசோக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com