பரமத்தி வேலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமைமாடு உயிருடன் மீட்பு

பரமத்தி வேலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமைமாடு உயிருடன் மீட்க்கப்பட்டனர்.
கிணற்றில் தவறிவிழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது எடுத்த படம்.
கிணற்றில் தவறிவிழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது எடுத்த படம்.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான எருமை மாட்டை தனது  தோட்டத்தில் மேய்த்துக்கொண்டிருந்தார். 

அந்த இடத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகே எருமை மாடு மேய்ந்தபோது நிலை தடுமாறி கிணற்றுக்குள் எருமைமாடு விழுந்தது. அதை பார்த்த சுப்பிரமணி அக்கம்பக்கத்தினரை அழைத்து எருமை மாட்டை கிணற்றுக்குள் இருந்து மீட்க முயற்சி செய்தார். 

இருப்பினும் முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி எருமை மாட்டை கயிற்றால் கட்டி லாவகமாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com