2-வது நாளாக ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

குமாரபாளையம் அருகே 2-வது நாளாக ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
2வது நாளாக காம்பவுண்ட் சுவற்றை பொக்லைன் மூலம் அகற்றப்பட்ட காட்சி.
2வது நாளாக காம்பவுண்ட் சுவற்றை பொக்லைன் மூலம் அகற்றப்பட்ட காட்சி.
Published on

குமாரபாளையம்,

குமாரபாளையம் சவுதாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர், அங்குள்ள ஓடைப்பகுதியில் காம்பவுண்ட் சுவர் அமைத்திருந்தனர். 

இதுபற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து 2 நாட்களாக குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி தலைமையிலான வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் காம்பவுண்ட் சுவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் அரசுக்கு சொந்தமான ஓடை பகுதியை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தமிழரசி எச்சரிக்கை விடுத்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com