வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செங்கோடு அருகே வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி குறு வட்டத்திற்கு உட்பட்ட ஏ.இறையமங்கலம் கிராமத்தில் தென்னை மற்றும் கரும்பு பயிர் செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பட்டா பாதை நிலத்தை திருச்செங்கோடு தாசில்தார் அப்பன்ராஜ் தலைமையில் போலீசார் முன்னிலையில் அகற்றம் செய்யப்பட்டது.

இந்த பணியின் போது திருச்செங்கோடு மண்டல துணை தாசில்தார் கோவிந்தசாமி, மொளசி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அர்ஜீனன், மொளசி குறுவட்ட நில அளவர் ரஞ்சித் குமார், அ.இறையமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கிராம உதவியாளர் சந்திரசேகரன் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com