திருச்செங்கோடு அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 2.27 ஏக்கர் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 2.27 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட காட்சி.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட காட்சி.
Published on

திருச்செங்கோடு:

தமிழகம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை மீட்குமாறு சென்னை ஐகோர்ட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டிருந்தார்.

 அதன்படி திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள நீர்நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. திருச்செங்கோடு மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் மல்லசமுத்திரம் வருவாய் ஆய்வாளர் ராஜா  கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com