பரமத்திவேலூர் பேட்டை புதுமாரியம்மன் திருவிழா: கம்பம் நடும் நிகழ்ச்சி

பரமத்திவேலூர் பேட்டை புதுமாரியம்மன் திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
,
,
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை  புதுமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். இன்று அதிகாலை கம்பம் நடும் விழா நடைபெற்றது.

வரும் 29-ந் தேதி பூச்சொரிதல் விழா வரும் 2- தேதி வடிசோறும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் தேதி பூ மிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவை தொடர்ந்து சுற்று வட்டார பொதுமக்கள் அம்மனை வழிபட்டு மாலை போட்டு விரதத்தை தொடங்கினர்.  விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com