பகலில் எரியும் மின்விளக்கு பொதுமக்கள் அதிருப்தி

பகலில் எரியும் மின்விளக்கு பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின் விளக்கை படத்தில் காணலாம்.
குமாரபாளையத்தில் பகலில் எரியும் மின் விளக்கை படத்தில் காணலாம்.
Published on

குமாரபாளையம், 

கோடை காலம் தொடங்கி விட்டதையடுத்து வெயில வாட்டி வருகிறது. காவிரியில் நீர் இல்லாமல் வற்றி உள்ளது. 

கிழக்கு கரை வாய்க்காலிலும் தண்ணீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கு கூட பற்றாக்குறையாக இருந்து வருகிறது. மின் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் மின்சாரம் சிக்கனம் தேவை என மின்வாரியம் சார்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் அனைத்தும் பகல் 7மணியை தாண்டியும் எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் மின்வாரியத்தினர் இப்படி செய்யலாமா? என பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com