

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மோகனூர் செல்லும் சாலையில் உள்ள ஓலப்பாளையம் ஊராட்சி கட்டமராபாளையம், விநாயகர் கோவில் திடலில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி, கடந்த 8-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில் பொன்னர்- முத்தாயி, சங்கர்-பவளாயி திருமணம் நடைபெற்றது.
இதில் உள்ளூரை சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னர்- முத்தாயி, சங்கர்-பவளாயி வேடம் அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து வருகிற 30-ந் தேதி இரவு பொன்னர் சங்கர் கதையில் முக்கிய நிகழ்வான படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.