பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
பேட்டை மகா மாரியம்மன் பூச்சொரிதல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
பேட்டை மகா மாரியம்மன் பூச்சொரிதல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவின் உற்சவம் நடந்து வருகிறது. 

இதன் 3-ம் நாளை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மூலவர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் ,உற்சவர் அம்மன் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. நிறைவாக பூச்சொரிதல் விழா மேள தாளங்களுடன் பரமத்திவேலூரை வலம் வந்தது.

 இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூத்தட்டு கொண்டு வந்து சாமிக்கு செலுத்தி தரிசனம் செய்தனர். 

இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com