நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி

நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

 பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com