டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு

பிலிக்கல்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் செல்லும் வழியில் பிலிக்கல்பாளையம் உள்ளது. இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மெயின் சாலையிலேயே டாஸ்மாக் கடை இருந்தது. அப்போது பொதுமக்களின் எதிர்ப்பால் ஊரைவிட்டு ஓரமாக கடை இடம் மாற்றப்பட்டது. 

தற்பொழுது ஆட்சி மாறிய பிறகு மீண்டும் டாஸ்மாக் கடையை பழைய இடத்துக்கு வர இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.   புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிலிக்கல்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. 

பேங்க் எதிரே டாஸ்மாக் கடை வந்தால் பேங்க் வாசலிலேயே குடிமகன்கள் அலம்பல்கள் அதிகரிக்கும். இதனால் பணம் கொண்டு வரும் மக்களிடம் பணம் எடுத்துச் செல்லும் பொதுமக்களிடம் ஒருவித பீதியை ஏற்படுத்தும். 

இப்பகுதி மக்களின் கோரிக்கையை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் செவிசாய்த்து கடையை தற்போது இருக்க வேண்டிய இடத்திலேயே இருக்கட்டும் என்பதே சாலச்சிறந்தது என உள்ளூர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

டாஸ்மாக் கடை வருவதை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com