

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு ராம நவமியை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. ராம நவமியை முன்னிட்டு சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு காலை 6 மணிக்கு ஆரத்தி நடைபெற்றது.
காலை 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு நெய்வேத்தியமும், சங்கல்ப பூஜையும், சிறப்பு ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மதியம் மற்றும் மாலையில் ஆரத்தி நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஆரத்தி விழா ராம நவமியை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் நேற்று முன்தினம் 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.