மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
.
.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் வேல்முருகன்(வயது 40). இவர் அப்பகுதியில்  காளான் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்  கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது அதை காணவில்லை. 

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில்  வாகனத்தை திருடியவர், வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் எண்ணத்தில் காவேரி நகர் பகுதியில் வந்தார்.

இதையடுத்து வேல்முருகனின்  நண்பர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாகனத்தை திருடிய நபர் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த முருகன்(52) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com