பரமத்திவேலூர் அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு

பரமத்திவேலூர் அருகே காணாமல் போன மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நல்லியாம் பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (85). இவரது மனைவி குழந்தாயி (80). நேற்று மதியம் 3 மணிக்கு  வீட்டில் இருந்த குழந்தாயியை காணவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர்க ளுக்கு சொந்தமான தோட்டம் சுண்டப்பனையிலிருந்து தண்ணீர்பந்தல் செல்லும் சாலையில் கிழவி காடு என்ற இடத்தில் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தபோது விவசாய கிணற்றில் மேட்டில் மூதாட்டி கையில் வைத்திருந்த ஊன்றுகோல் மற்றும் அவரது செருப்பு கிணற்று மேட்டில் கிடந்துள்ளது.

இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தீவிரமாக தேடினர்.

பின்னர் மூதாட்டியின் உடலை கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். அப்போது மூதாட்டி இடுப்பில் வாளியை கட்டிக்கொண்டு வாளிக்குள் கற்களைப் போட்டு, முகத்தை துணியால் கட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து குழந்தாயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com