விபத்தில் கூலித் தொழிலாளி சாவு

பொத்தனூர் பகுதியில் விபத்தில் கூலித் தொழிலாளி சாவு
.
.
Published on

பரமத்திவேலூர்:

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது45). 

இவர் கடந்த 10 வருடங் களாக பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் உள்ள ஒரு சிமெண்ட் பைப் தயாரிக்கும நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 1-ஆம் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன் னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென பிரேக் போட்டதால் சங்கர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com