பாண்டமங்கலம் அருகே கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பாண்டமங்கலம் அருகே கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலம் அருகே உள்ள குச்சி பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47) கூலித்தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா (39). இவர்களுக்கு கார்வேந்தன் (19) என்ற மகனும்,பார்கவி(16) என்ற மகளும் உள்ளனர். 

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த சரவணனின் மனைவி காஞ்சனா கணவரிடம் கோபித்து கொண்டு பாலப்பட்டி அருகே  எல்லைக்காட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்த நிலையில் கடந்த 2 மாதமாக கோபித்துக் கொண்டு சென்ற தனது மனைவி வராததால் மனமுடைந்த நிலையில் இருந்த சரவணன் நேற்று குச்சிபாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள குட்டுக்காட்டில் உள்ள ஒரு மரத்தில் அப்பகுதியில் கிடந்த துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.  அங்கு சென்ற போலீசார் சரவணனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். 

இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com