உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர் சொந்த ஊர் திரும்பினார்

வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர் சொந்த ஊர் திரும்பினார்.
உக்ரைனில் மருத்துவம் படித்த சரவணன்.
உக்ரைனில் மருத்துவம் படித்த சரவணன்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் சரவணன் உக்ரைனில் 5-ம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்ட தீவிர போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவ மாணவர் சரவணன், தன்னையும் சக மாணவர்களையும் மீட்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் காரணமாக மாணவன் சரவணன் உக்ரைனில் இருந்து கார்கோ விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு சொந்த ஊரான வேலகவுண்டம் பட்டிக்கு திரும்பினார். சொந்த ஊருக்கு திரும்பிய சரவணனுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் சரவணன் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே உக்ரைன் நாட்டில் போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏராளமான தமிழர்களும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து போரில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு இந்தியாவுக்கு விரைந்து அழைத்து வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் தற்போது உணவுப்பொருட்கள் கிடைப்பது மிகவும் கடினமான சூழ்நிலை இருப்பதாகவும், போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில் அங்கு வாழும் மக்கள் உயிர் பயத்துனுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களை மீட்டு அழைத்து வர உதவிய மத்திய, மாநில அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com