ராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி

ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழாவையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

ராசிபுரம்:

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கடந்த 2-ம் தேதி தீமிதி விழா நடந்தது. 

நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், நடராஜர் உற்சவ மூர்த்திகள் அழைப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அங்காளம்மன் சாமியை அலங்கரித்து பழைய பஸ் நிலையம் வழியாக சிங்க வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து முத்துக்காளிபட்டி மயானத்தில் பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டுவந்திருந்த ஆடு, கோழிகளை விரதம் இருந்து வந்திருந்த ஆடு கடிக்கும் பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் கடித்து மயானக்கொள்ளை நடத்தினர்.

25-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை உயிருடன் கடித்து மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு காவு கொடுத்தனர். நிகழ்ச்சியில் ராசிபுரம் புதுப்பாளையம் முத்து காளிப்பட்டி கவுண்டம்பாளையம் கட்டனசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com