மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

வீராச்சிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
.
.
Published on

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீராச்சிபாளையம் செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 

விழாவில் நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வர, வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். 

இன்று அம்மனுக்கு குமாரபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com