.
.

கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் பாலாபிஷேகம்

கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் பாலாபிஷேகம் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

குமாரபாளையம், 

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி குமாரபாளையத்தில் ராஜா வீதி சவுண்டம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். 

இதைத்தொடர்ந்து நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. 

 முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. சிவனின் வேடமிட்ட குழந்தையை மேள தாளத்துடன், சீர் வரிசைகளுடன் பக்தர்கள் அழைத்து வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு காட்சியளித்தனர். 

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, அம்மன் திருகல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலிலும் சவுண்டம்மன் திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com