பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்

பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடந்தது.
பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாமை தொடங்கி  வைத்து பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் த
பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாமை தொடங்கி வைத்து பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் த
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோமசேகர் தலைமை வகித்து முகாமை  தொடங்கி  வைத்தார். பேரூராட்சித் துணைத் தலைவர்பெருமாள் என்கிற முருகவேல் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ் வரவேற்றார்.

முகாமில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி பகுதிகளில் முளைத்துள்ள செடி, கொடிகளையும், தெருக்களில்  பல்வேறு கழிவுகளையும், அகற்றி துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். 

துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுவதை பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். முகாமில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com