

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு நடந்த தேர்தலில் தி.மு.க.-14, அ.தி.மு.க.-10, சுயேட்சைகள் 9 இடங்களில் வெற்றிபெற்றன.
புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நகராட்சி கூட்ட அரங்கம் தயார்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நகராட்சியில் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் 4ம் தேதி நடக்கிறது.