இல்லம் தேடி கல்வி, தன்னார்வலர்களுக்கான பயிற்சி

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி, தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்.
கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்.
Published on

பரமத்திவேலூர்:

திருச்செங்கோடு கல்வி மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தன்னார்வலர் களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி 5 குறுவளமையத்திற்கு  உட்பட்ட 219 மையங்களில் நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வியின் முதன்மை நோக்கமாக கற்றல் இடைவெளியை போக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பயிற்சி வழங்கப்பட்டது . பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கல்வி கண்காட்சியை பார்வையிட்டனர் . 

கல்விக் கண்காட்சியில் தன்னார்வலர்கள் செய்த கற்றல், கற்பித்தல், துணைக்கருவிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றிருந்தது. இல்லம் தேடி கல்வி பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வியின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் முடநீக்கியல் மருத்துவர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com