நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகே உள்ள எம்.ராசாம் பாளையத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (55). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (50). சம்பவத்தன்று, காலை சாந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

அப்போது திடீரென சமையல் கியாஸ் கசிந்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்து  வெளியே ஓடி வந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். 

இந்த தீ விபத்தில் சமையல் அறைக்குள் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதிப்புள்ள மிக்சி, கேஸ் ஸ்டவ் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com