கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம்

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம்
விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீடு பிரிவு உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல் மோகன் பேசிய
விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீடு பிரிவு உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல் மோகன் பேசிய
Published on

குமாரபாளையம், ஏப்.9

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் கொங்கு பவர்லூம்ஸ் உரிமை யாளர்கள் சங்க கட்டிடத்தில், நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீடு பிரிவு உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்மோகன் பங்கேற்று பேசினார். 

கைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடிய ரகங்களை விசைத்தறியில் நெய்யக் கூடாது. எந்தெந்த ரகங்கள் விசைத்தறியில் நெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தரும் உதவிகள் குறித்தும், தொழிலாளர் நல வாரியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இதில் கைத்தறி துறை ஆய்வாளர்கள் கவுதமன், சுரேஷ்குமார், சுதா, தொழில் நுட்ப அலுவலர் அருள்குமார், சங்க செயலர் சவுந்தரராஜன்,பொருளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com