கபிலர்மலை அருகே வகுப்புக்கு செல்லாத சிறுமியை மீண்டும் பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியில் வகுப்புக்கு செல்லாத சிறுமியை அதிகாரிகள் மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வு பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வு பணி நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வு பணி நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமையில் இந்த பணி நடைபெற்றது.

இதில்  வட்டார அளவில் உள்ள அனைத்து குடியி ருப்புப் பகுதிகளுக்கும் சென்று பெற்றோர்களை நேரில் சந்தித்து மாணவ, மாணவிகளின் கல்வியின் அவசியம் மற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

மேலும் மாணவ, மாணவி களின் தற்போதைய உண்மை நிலை அறிந்து அவர்கள் தொடர்ந்து பள்ளியில் சேர்ந்து கல்வி பயில ஏற்பாடு செய்தனர்.  

அதன் அடிப்படையில் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த இடைநின்ற மாணவியை கண்டறிந்து அவரை பாண்டமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று 11-ம் வகுப்பில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com