

நாமக்கல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 5,529 காலி பணியிடங்களுக்கு குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 18-ந் தேதி வெளியிட்டது. கடந்த 23-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதனிடையே முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. அதன்படி 10-&ம் வகுப்பு புதிய சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தங்களின் விவரங்களை 04286 222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ, onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.