

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்து அலவாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் சக்திவேல் (வயது 30). தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.
உடனடியாக வெளியே ஓடி வந்த அவர் இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
பின்னர் விசாரணையில் கியாஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.