பைக் மீது லாரி மோதி விவசாயி சாவு

பைக் மீது லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (47). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில், மங்களபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

 மெட்டாலா அருகே சென்றபோது, முள்ளுக்குறிச்சியில் இருந்து மின்கம்பங்களை ஏற்றி வந்த லாரி, ராஜகோபால் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com