.
.

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையம் அருவண் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மகன் சுகுமார் (வயது 42). விவசாயி.

இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அவரது நண்பர் வரதராஜன் என்பவரது தென்னந்தோப்பில் நெருப்புப்பொறி வந்ததாக கூறி அதை பார்க்க சென்றார். 

தென்னந்தோப்புக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மின்கம்பியில் தொங்கிய தென்னை மட்டை சுகுமார் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சுகுமாரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை மருதப்பன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com