காவிரி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

பள்ளிபாளையம்:

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 41). ஈரோடு ரெயில்வே சரக்கு குடோனில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

சேகர் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டையில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆற்றின் ஆழமானபகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com