மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

நாமக்கல்லில், 17ந்தேதி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடக்கின்றன.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வருகிற 17ந்தேதி முதல் 35 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நாமக்கல் சக்திமயில் திருமண அரங்கில் நடைபெறுகிறது. இதில், குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. இதில் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை.

ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீ£¢வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணிநேரம் அனுமதிக்கப்படுவர். 

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். இந்த வாய்ப்பினை இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com