

பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சி.ஓ.ஐ.டி.யு. சார்பாக திருச்சியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 9 ஆண்டு காலமாக வாய்மொழி உத்தரவு காரணமாக பணி வழங்காத திருவள்ளூர் மாவட்ட பெண் தொழிலாளருக்கு மீண்டும் பணி வழங்க கோரியும், அனைத்து 108 ஆம்புலன்ஸ்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 24 மணி நேரமும் முழுமையாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட கரூர், நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்ட தொழிலாளர்களின் பணிநீக்கத்தை கைவிட்டு அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் மத்திய, மாநில அளவிலான தொழிற்சங்கங்களின் ஆதரவு கோரி தமிழகம் முழுவதும் ஒரு வாரகாலமாக துண்டுப்பிரசுர விநியோகம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டது.