வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

குமாரபாளையம்:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தலைவர் பாரசக்தி தலைமையில் வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி குடும்ப தலைவர் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கு மானிய விலையில் கேஸ் வழங்க வேண்டும், 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்க்ஷ்கள் எழுப்பப்பட்டன. 

இதில் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், சண்முகம், அர்சுணன், சசிகலா, செல்வராணி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com