.
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
வளர்ச்சி திட்டங்களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். கால நேரம் இன்றி, வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் பகிர்வதையும், காணொலி கூட்டம் நடத்துவதையும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலவிநாயகம், பொருளாளர் லோகமணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அரசு விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதையும், அலுவலக பணிக்கு வர வற்புறுத்துவதையும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

