மலை போல் தேங்கிய குப்பைகள்

குமாரபாளையம் பகுதியில் பல இடங்களில் மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
,
,
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட், சரஸ்வதி தியேட்டர் எதிரில், நாராயண நகர் பள்ளி அருகில், அரசு பி.எட்.கல்லூரி வாட்டர் டேங்க் அருகில் என பல இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 

தொற்று நோய்கள் பரவி வருவதற்கு முன், தாமதமின்றி குப்பைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com