போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, நகை அடகு கடை, வங்கி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: 

ஒவ்வொரு வங்கி, நகைக் கடைகளில், நகை அடகு கடைகளில் சி.சி.டி.வி.  கேமரா வைக்க வேண்டும். வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். அலாரம் பொருத்த  வேண்டும். சந்தேகப்படும் படி நபர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, சிவகுமார், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

குமாரபாளையத்தில் 16 வங்கிகள், 21 ஏ.டி.எம்.கள், 8 நகைக்கடைகள் மற்றும் பல நகை அடகு கடைகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com