அரசு தொடக்கப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
.
.
Published on

நாமக்கல்:

நாமக்கல் கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை நிர்மலா தலைமையில் மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. 

நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் தாசில்தார் திருமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வை பார்வையிட்டார்.

இதில் கலந்து கொண்ட பெற்றோர் பள்ளி முடியும் நேரத்தில் கோட்டை சாலையில் அதிக வாகனங்கள் செல்வதால், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். 

எனவே மாலை 4 மணி முதல் 5 மணி வரை போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com